பேரிடர் எச்சரிக்கைகளை அனுப்புவதில் சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல ஐரோப்பிய நாடுகளைப் போலல்லாமல், சுவிட்சர்லாந்து, வரவிருக்கும் இயற்கை பேரழிவுகள் குறித்து மக்களை எச்சரிக்க Cell Broadcast தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது .

சிவில் பாதுகாப்புக்கான பெடரல் அலுவலகம் ஏற்கனவே 2014 ஆம் ஆண்டில் இந்த அமைப்பைச் சோதித்துள்ளது. இருப்பினும், பெரும்பாலான செல்போன்கள் அந்த நேரத்தில் செல் ஒலிபரப்பை ஆதரிக்காததால், இதை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தது.
அப்போதிருந்து, அதிகாரிகள் இந்த அமைப்புக்கு ‘உள்கட்டமைப்பு மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் கணிசமான முதலீடு தேவைப்படுவதாக தெரிவித்திருந்தனர்.

பல எம்.பி.க்கள், செல் ஒலிபரப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தாலும், சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே திறமையான எச்சரிக்கை அமைப்பு உள்ளதாகவும் அதன் சைரன் நெட்வொர்க் முழுப் பகுதிக்கும் மக்களை எச்சரிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அது மாத்திரமின்றி Alert Swiss என்ற மக்களை எச்சரிக்கும் செயலியும் பயன்பாட்டில் இருப்பதாக எம்.பி.க்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். (SDA)