புத்தாண்டு தினத்தில் சுவிஸில் 3 குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவிப்பு – 2025 புத்தாண்டின் முதல் குழந்தை ஆராவ்வில் பிறந்துள்ளது. குறித்த பெண் குழந்தையின் பெயர் (Amelie) அமேலி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.. அவள் பிறக்கும்போது 3,830 கிராம் எடையும் 53 சென்டிமீட்டர் உயரமும் கொண்டு காணப்பட்டுள்ளார். அமேலி மற்றும் அவரது தாயார் இருவரும் நலமாக உள்ளதோடு தற்போது மருத்துவக் குழுவால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
அமேலிக்குப் பிறகு, (Muri) முரி மருத்துவமனையில் (Adrian) அட்ரியன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அவர் ஜனவரி 1, 2025 அன்று அதிகாலை 3:16 மணிக்கு பிறந்தார். அட்ரியன் மற்றும் அவரது தாயும் நன்றாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு புத்தாண்டு குழந்தை Leuggern மருத்துவமனையில் பிறந்தது. அங்கு காலை 6:01 மணிக்கு பிறந்தார். குறித்த ஆண் குழந்தை Musa என பெயரிடப்பட்டுள்ளது. சிறுவன் 2,810 கிராம் எடையும் 49 சென்டிமீட்டர் நீளத்துடன் பிறந்துள்ளார். மூசாவும் நலமாக இருப்பதாகவும், அவரும் அவரது குடும்பத்தினரும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.