புத்தர் சிலைக்குள் போதைப் பொருள் கடத்திய நபர் கைது!! பெர்லீனில் இருந்து சுவிட்சர்லாந்தின் பாசல் செல்லும் ரயிலில் பயணி ஒருவரை சோதனை செய்தபோது, போதைப் பொருள் கடத்திய நபர் ஒருவரை ஜெர்மன்-சுவிஸ் கூட்டு செயல்பாட்டு சேவை குழுவின் கண்டுபிடித்துள்ளனர்.
பல்வேறு அலங்காரப்பொருட்களுக்குள் மறைந்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் போதைப்பொருட்களை நூதன முறையில் கடத்தியுள்ளார். குறிப்பாக புத்தர் சிலையொன்றின் தலைப்பகுதியில் இருந்தும் போதைப்பொருட்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 13 கிலோகிராம் எடையுயுடைய கெற்டமைன் மற்றும் ஒரு கிலோ கிராம் எம்.டி.எம்.ஏ வைகப்போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆதாரம்: சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு BAZG பெடரல் அலுவலகம்
ஏப்ரல் 2, 2024 அன்று, பெர்லினிலிருந்து பாசெலுக்கு வரும் ரயிலில் கூட்டு செயல்பாட்டு சேவைக் குழுவின் ஒரு பகுதியாக சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான ஃபெடரல் அலுவலகம் மற்றும் ஜெர்மன் ஃபெடரல் காவல்துறையின் ஊழியர்கள் சோதனைகளை மேற்கொண்டனர்.
குறித்த ரயில் பாசல் ரயில் நிலையத்தை அடைவதற்கு சற்று முன், சூட்கேஸுடன் பயணித்த ஒரு பயணியை சோதனை செய்தனர். அவசரகாலச் சேவைப் பிரிவினர் பயணச் சாமான்களை சோதனையிட்டபோது, 28 கேன்கள் மற்றும் 8 பைகளில் தெரியாத பொருள் மற்றும் புத்தர் தலையின் வடிவில் அலங்கார உருவம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
புத்தரின் தலையில் எக்ஸ்ரே இயந்திரம் அசாதாரண விடயங்களை சுட்டிக்காட்டியதன் விளைவாக உருவம் துளையிட்டு சோதனை செய்யப்பட்டதில் குற்றவாளி சிக்கியுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் யாவும் பாசல் நகர கன்டோனல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.