பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் TikTok சமூகவலைத்தள கணக்கு முடக்கப்பட்டுள்ளது. சில மணிநேரங்கள் இந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் உத்தியோகபூர்வ TikTok கணக்கு சிலமணிநேரம் தடைப்பட்டது. ‘கணக்கு தடைசெய்யப்பட்டுள்ளது Compte banni என குறிப்பிடப்பட்டிருந்தது.

காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல் மர்மமான முறையில் கணக்கு முடக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலமணிநேரம் வரை நீடித்த இந்த தடை பின்னர் மீண்டும் இயல்புக்கு திரும்பியது.
பிரான்ஸ்சில் உங்கள் கைரேகை பார்த்து எதிர்காலத்தை துல்லியமாக தெரிந்துகொள்ள எம்மை நாடுங்கள்
எனினும் TikTok தரப்பில் இது தொடர்பாக போதிய விளக்கமளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.9 மில்லியன் பயனாளர்கள் மக்ரோனின் கணக்கை பின் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.