பிரான்ஸில் வீடொன்றில் தீ விபத்து; தீயில் கருகிய தாயும் 7 பிள்ளைகளும்! பிரான்ஸில் வீடொன்றில் தீயினால் பெண்ணொருவரும் 7 பிள்ளைகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.52 மணியளவில் இச்சம்பவம் குறித்த தீயணைப்புப் படையினருக்கு அயலவர்களால் அறிவிக்கப்பட்டது.

பிள்ளைகளான 3 சிறுமிகளும் 2 சிறுவர்களும் வீட்டின் இரண்டாவது மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது தீ பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பிள்ளைகளில் நால்வர், அப்பெண்ணின் முதல் திருமணம் மூலம் பிறந்தவர்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த சிறார்கள் 2 முதல் 14 வயதானவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
