பிரான்ஸில் மாணவிகளோடு தொடர் சில்மிசம் செய்த ஆசிரியர்..!! பிரான்ஸில் மாணவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Oderen (Haut-Rhin) நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் 55 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியர் 7 தொடக்கம் 10 வயதுக்குட்பட்ட மாணவிகள் பலரிடம் தகாத முறையில் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை 2 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், நேற்று சனிக்கிழமை 4 ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரிடம் பல ஆயிரம் ஆபாச புகைப்படங்கள் இருந்ததாகவும் அவை ஆபாச இணையத்தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதலாவது வழக்கு பதிவாகியிருந்தது. குறித்த ஆசிரியரிடம் பயிலும் மாணவி ஒருவரது தாய் தனது மகளின் நாட்குறிப்பேடை பார்க்கும் போது, அதில் தனது ஆசிரியர் அந்தரங்கப்பகுதியில் கை வைத்ததாக எழுதப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த தாய் காவல்துறையினரை அனுகியுள்ளார்.
அதன் பின்னர் பூதாகரமாக வெடித்த இந்த விவகாரம், இறுதியில் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.