பிரான்ஸிலிருந்து ஜெனீவாவை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் விபத்து.!!
பிரான்ஸிலிருந்து ஜெனீவாவை நோக்கி சென்றுகொண்டிருந்த TGV அதிவேக ரயில் ஒன்று, நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை, ஜெனீவா அருகேயுள்ள ரஸ்ஸின் (Russin) பகுதியில் திராட்சை வயலில் பணியாற்றிய டிராக்டர் ஒன்றை மோதியது.
இவ்விபத்து, டிராக்டர் தவறி ரயில்வே பாதையில் விழுந்ததால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தின் போது டிராக்டர் ஓட்டுனர் அதிலிருந்து வீசப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
TGV ரயில் சுமார் 95 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ரயில் பாரிய சேதமடைந்தது. இருப்பினும், ரயிலில் பயணித்த யாரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சேதமடைந்த ரயில் பின்னர் ஜெனீவாவுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. வழித்தடம் சுத்தம் செய்யப்பட்ட பின்னர், ரயில் பாதை மத்திய பகுதியிலேயே மீண்டும் திறக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுவிஸ் ரயில்வே மற்றும் உள்ளூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
@WRS