பிரான்ஸின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் நான்கு வாரகாலத்திற்கு பின்னர் காய்ச்சல் தொற்றுநோய் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கமைய, பிரான்ஸில் உள்ள 13 பிராந்தியங்களில் மொத்தம் 10 பகுதிகள் சிவப்பு எச்சரிக்கையில் உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் தொற்றுநோய் அளவில் உள்ளதெனவும் குறிப்பாக மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதெனவும் குறிப்பிடப்படுகின்றது.

தொற்று நோயாளர்களின் அதிகரிப்பு தொடர்ந்து நான்கு வாரங்கள் குறைந்த பிறகு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதென குறிப்பிடப்படுகின்றது. பெரும்பாலான தொற்றுக்கள் பி/விக்டோரியா வகையைச் சேர்ந்தவை என்று தேசிய சுகாதார ஆணையம் தனது சமீபத்திய தரவுகளில் தெரிவித்துள்ளது.
மேலும் பிரான்ஸின் செய்திகள் அறிந்து கொள்ள CLICK HERE