பாசல் விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் : குண்டு பீதி காரணமா.?
பாசல் யூரோ சர்வதேச விமான நிலையத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எவ்வாறெனினும் ஏற்கனவே விமானங்களில் ஏறியிருந்தவர்கள் விமானப் பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
விமான நிலையத்தில் குண்டுப் பீதி காரணமாக இவ்வாறு பயணிகள் பாதுப்பான முறையில் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

சுவிஸ் எல்லைப் பாதுகாப்பு படையினர், பிரான்ஸ் இராணுவத்தினர் ஆகியோர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக வருந்துவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.