பாசலில் ஒரு புதிய மோசடி மூலம் 150,000 பிராங்குகள் மோசடி.!! கடந்த சில நாட்களில், Basel-Stadt இல் இரண்டு மோசடி குற்றங்களில் 150,000 பிராங்குகள் திருடப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை பாசல் அரசு வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்தபடி, மோசடி செய்பவர்கள் தொலைபேசி மூலம் கணக்கு அணுகல் தரவைப் பெற்றனர்.
குற்றவாளிகள் ஒரு வங்கியின் ஊழியர்களாக காட்டிக்கொண்டு, ஹேக்கர்களின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அவர்களது வங்கிக்கணக்கிற்கு ஆபத்து உள்ளதென வற்புறுத்தி வாடிக்கையாளர்களின் வங்கி தரவுகளை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோசடி செய்பவர்கள் சுவிஸ் ஜெர்மன் மொழி பேசசியதாகவும் பாதிக்கப்பட்டவர் மூலம் தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
பொலிஸாரோ அல்லது வங்கி ஊழியர்களோ யாரையும் வங்கி அணுகல் விவரங்களை வழங்கவோ அல்லது வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் இருந்து பணத்தை எடுக்கவோ கேட்க மாட்டார்கள் என்று Basel-Stadt அரசு வழக்கறிஞர் அலுவலகம் சுட்டிக்காட்டுகிறது.
(sda)