பாசலில் இளைஞன் தாக்கப்பட்டு மூவரால் கொள்ளை பாசல் கன்டோன் Muttenz இல் நவம்பர் 8 முதல் 9, 2024 இரவு, ஒரு வழிப்போக்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
Muttenz ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 20 வயதுடைய நபர் ஒருவரை பின்தொடர்ந்து, Schulstrasse இல் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அச்சுறுத்தி கொள்ளையடித்துள்ளனர்.
Basel-Landschaft பொலிசார் இப்போது தகவல்களை வழங்கக்கூடிய சாட்சிகளைத் தேடி வருகின்றனர்.
குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட நபரிடம் சுமார் பன்னிரண்டரை மணியளவில் பேசி பணம் கேட்டனர். அந்த இளைஞன் உடனடியாக பதிலளிக்காததால், அவரை ஒரு புதருக்குள் தள்ளி, மிரட்டி அடித்து, இறுதியில் அவரது பணப்பையை திருடிச் சென்றனர்.
(Symbolbild)
பின்னர் மூவரும் Obrechtstrasse (ஒப்ரெக்ஸ்ட்ராஸ்ஸில்) உள்ள சைக்கிள் பாதையை நோக்கி தப்பிச் சென்றனர்.
குற்றவாளிகள் மூவருமே 20 வயது மதிக்கத்தக்கவர்கள், கருமையான கூந்தல் உடையவர்கள், கருப்பு ஆடை அணிந்தவர்கள் எனவும் குற்றவாளிகளில் இருவர் முகத்தை மறைக்க ஸ்கை மாஸ்க் அணிந்திருந்தனர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாட்சிகள் அல்லது சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தகவல் அளிக்க முன் வருமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.