பனிப்பொழிவு காரணமாக சுவிட்சர்லாந்து முழுவதும் போக்குவரத்து தடை- இன்று திங்கட்கிழமை மீண்டும் சுவிட்சர்லாந்தில் நாடுதளுவிய ரீதியில் பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளது. இப்பனிப்பொழிவால் பனிமூட்டம் காரணமாக சுவிட்சர்லாந்தில் பல்வேறு சாலைகள் மற்றும் ரயில்வேயில் பல தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது.
A1 நெடுஞ்சாலையில், Bern Brünnen மற்றும் Mühleberg இடையே ஒரு டிரக் சாலையைத் தடுத்து நிறுத்தியது. ஃபெடரல் சாலைகள் அலுவலகம் (அஸ்ட்ரா) ஓட்டுநர்களுக்கு மாற்று வழியாக லவுசான் வழியாக A12 வழியைப் பயன்படுத்த அறிவுறுத்தியது.
இதேபோல், லுட்டர்பாக் சந்திப்புக்கும் சோலோதூர்ன் கிழக்குக்கும் இடையிலான A3 நெடுஞ்சாலையில், மற்றொரு டிரக் போக்குவரத்தை சீர்குலைத்தது.
Solothurn மாகாணத்தில், Welschenrohr மற்றும் Flumenthal இடையேயான கன்டோனல் சாலையும் பனி மூடிய சாலைகள் காரணமாக மூடப்பட்டது.
இது மாத்திரமின்றி ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் ஃபெடரல் ரயில்வே (SBB) ரயில் சேவைகளில் தாமதங்கள் மற்றும் ரத்துக்கள் இடம்பெறலாம் எனவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (SDA)