நிறுவனங்களுக்குள் புகுந்து பெருமளவு பணம் கொள்ளை: Rüthi-SG இல் சம்பவம்.!! சுவிட்சர்லாந்தின் St.Gallen மாகாணத்தின் Rüthi பிரதேசத்தில் இரண்டு நிறுவனத்துக்குள் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் .(03/02/23) வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. Rüthi பகுதியில் Blosenbergstrasse யில் இரு வேறு நிறுவனங்களுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பல ஆயிரம் சாங்குகள் பணத்துடன் பதிவேட்டை திருடி இருக்கிறார்கள்.

மற்றொரு நிறுவனத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள் சில நூறு பிராங்குகள் மதிப்புள்ள பணத்தையும் திருடி உள்ளதாக தெரிய வந்திருக்கிறது. மொத்தம் 4000 பிராங்குகள் மதிப்புள்ள அளவுக்கு திருட்டு இடம் பெற்றிருப்பதாக Rüthi போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளையும் Rüthi போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.