நிரம்பி வழியும் சுவிஸ் விமான நிலையங்கள் – வெளியான புதிய அறிவிப்பு.!! ஜெனீவா மற்றும் சூரிச் விமான நிலையங்கள் இரண்டும் கிறிஸ்துமஸுக்கு முன்னரான நாட்களில் ஏராளமான பயணிகளுடன் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை கொரானா காலத்திற்கு முன்னர் இருந்த அளவிலான எண்ணிக்கையை தொடும் எனவும் RTS தெரிவித்துள்ளது.
23 டிசம்பர் 2022 வெள்ளிக்கிழமை, 55,000 க்கும் மேற்பட்ட பயணிகள் ஜெனீவா விமான நிலையத்தை (Cointrin) கடந்து சென்றுள்ளதாகவும், இந்நாளில் முந்தைய நாளை விட சுமார் 3,000 பேர் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விமான நிலைய நிர்வாகத்தின் கூற்றுப்படி, இந்த நிலை கோவிட்-19 வருவதற்கு முன்பு 2019 இல் இருந்த எண்ணிக்கைக்கு மிக அருகில் வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
நிரம்பி வழியும் சுவிஸ் விமான நிலையங்கள் – வெளியான புதிய அறிவிப்பு.!!
எதிர்வரும் 4 ஜனவரி 2020 அன்று விமான நிலையத்திற்கான அதிகபட்ச தினசரி எண்ணிக்கை 77,000 பயணிகள் வரையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சூரிச்-Kloten விமான நிலையத்தில், டிசம்பர் 24 முதல் ஜனவரி 2 வரை தினமும் 65,000 பயணிகள் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலத்தில் ஒரு நாளைக்கு 34,000 பயணிகள் மட்டுமே இருந்தனர், அதற்கு முந்தைய ஆண்டு ஒரு நாளைக்கு 17,000 பேர் மட்டுமே இருந்தனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபற்றி விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சூரிச் விமான நிலையத்தில் பரபரப்பான பண்டிகை காலங்களில் ஒரு நாளைக்கு 85,000 பேர் வந்துள்ளனர்.
விமான நிலைய நிர்வாகம் பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வருமாறும் அறிவுறுத்துகிறது. ஜெனிவா விமான நிலையத்தில், புறப்படுவதற்கு குறைந்தது இரண்டரை மணிநேரம் முன்னதாகவே வந்துவிட வேண்டும் என்பது எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.