நதியொன்றின் நீரோட்டச் சத்தம் அதிகமாக ஒலிப்பதாக சுவிட்சர்லாந்து கிராமம் ஒன்றைச் சேர்ந்த மக்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். உள்ளுராட்சி அதிகாரிகளுக்கு எதிராக கிராம மக்கள் இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
வாவுடன் கான்டனின் Saint Légier மாவட்டத்தின் மக்களே இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நதியின் நீரோட்டத்தில் எழும் ஓசையை குறைப்பதற்கு சவுன்ட்புருப்பீங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு கோரியுள்ளனர்.
நதியின் நீரோட்டச் சத்தம்
இந்த நதியானது விவசாயிகள் தங்களது நீர்பாசனத் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020ம் ஆண்டில் இந்த நதி திசை பகுதியளவில்ல் திருப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நதியின் நீரோட்டத்தினால் எழும் ஓசை அதிகளவில் கிடையாது எனவும் இதனால் சவுன்ட்புருபிங் செய்ய முடியாது எனவும் உள்ளுராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் ஓசை மிக அதிகம் என்பதனை ஒப்புக் கொண்டுள்ளதுடன் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.
உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள் நதியின் நீரோட்டத்தினால் எழும் ஓசையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பணிப்புரை வழங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் தேவாலய மணியோசை, பொதுக் கடிகாரங்களின் மணியோசை போன்றவற்றின் ஓசை அதிகம் என முறைப்பாடுகள் செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.