சுவிட்சர்லாந்து வாழ் தமிழ் உறவுகளுக்கு வணக்கம். நம்மளோட சானலில் வழக்கமாக சுவிட்சர்லாந்து சார்ந்த செய்திகள், தகவல்கள் மட்டுமே நாம் ஒளிபரப்பி வருகிறோம் என்பது எமது சானல் பார்க்கின்ற உறவுகளுக்கு நன்கறிந்த விடயம். அப்படி இருக்கின்ற போது எதற்காக திடீரென துவாரகாவினுடைய செய்தி என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
அதற்கான விளக்கத்தினை செய்தியின் ஆரம்பத்திலையே சொல்லிக்கொள்ள கடைமைப்பட்டுள்ளோம். அண்மையில் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது புதல்வி துவாரகா பற்றிய செய்தி உலகத்தமிழர் மத்தியில் பெரும் பேசுபொருளாக இருப்பது நீங்கள் அறிந்த விடயம். அவற்றையெல்லாம் கடந்து துவாரகா என சொல்லப்படும் குறித்த பெண் சுவிட்சர்லாந்தில்தான் இருக்கிறார் என்கின்ற செய்திகளையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அப்படியாயின் இது தொடர்பான செய்திகளில் சுவிட்சர்லாநது என்கின்ற நாடும் இருப்பதால்தான் இது தொடர்பான செய்தியினை நாமும் அலச வேண்டி முற்படுகிறோம். நாம் கொடுக்க இருக்கின்ற தகவல்கள் அனைத்தும் ஏனைய ஊடகங்களில் தற்போது பேசப்படுகின்ற பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற வெளிவந்த வெளிவராத சில தகவல்களை திரட்டி சுவிட்சர்லாந்து வாழ் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எமது எண்ணம் என்பதை கருத்தில் கொள்க.
மேற்படி இது ஒரு புதிய செய்தியை மக்களிடம் திணிப்பதற்காகவோ சோடிக்கப்பட்டோ எழுதப்படவில்லை என்பதையும் இங்கு சொல்லிக்கொள் விரும்புகிறோம். இங்குள்ள தமிழர்களிள் கருத்துக்கள் உட்பட அத்தனை விடயங்களும் அவரவர் தனிப்பட்ட கருத்துக்களே தவிர எமது ஊடகம் எந்தவிதத்திலும் பொறுப்பல் என்பதையும் கூறிக்கொள்ளுகிறோம். தெரிவிப்பது நாமாக இருந்தாலும் தீர்மானிப்பது நீங்களே என்கின்ற உண்மையையும் பொறுப்பையும் உங்களிடம் ஒப்படைத்தவாறு மேலதிக விபரங்களை பார்க்கலாம். சரி வாங்க வீடியோக்குள்ள போகலாம்….
கடந்த 2009 ம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவுற்ற நிலையில் இருந்து இன்று வரை தலைவர் மற்றும் தலைவரின் மகள் துவாரகா உட்பட மனைவி மதிவதனி தொடர்பான சர்ச்சைகளும் வதந்திகளும் பரவிக்கொண்டுதான் இருக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் நெருங்கும் போது தலைவர் உயிருடன்.. தலைவர் வருகிறார் என்ற செய்திகள் தமிழ் ஊடகங்களை ஆக்கிரமிக்க தவறுவதுமில்லை.
இப்படியே 14 ஆண்டுகள் தமிழர்கள் நாம் இலகு காத்த கிளிகள் போல் காத்துக்காத்து பார்த்து பார்த்து நொந்து நூலாகிப்போயிருக்கிறோம். இந்த சமயத்தில்தான் அண்மையில் தமிழகத்தின் ஈழ விடுதலைப்போராட்ட உணர்வாளர்களாக மதிக்கப்படுகின்ற நெடுமாறன் காசி ஆனந்தன் உட்ப இன்னும் ஒரு சில தமிழ்தேசிய வாதிகளால் தலைவர் வெகுவிரைவில் வெளிப்படுவார் என்கின்ற செய்தி முதல் முறையாக ஊடகசந்திப்பு நிகழ்த்தி இனிப்பு வழங்கி கூறப்பட்டிருந்தமையும் நீங்கள் அறிந்த செய்தி.
ஊடகங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலழித்த அவர்கள் நேரம் வரும்போது எல்லாம் வெளிப்படும் நாங்கள் அவர்கள் குடும்பத்தினருடன் பேசினோம் மேலதிக தகவல்கள் சொல்ல இயலாது என மேலதிக கேள்விகளுக்கு முற்றுப்புள்ள வைத்திருந்தனர். இது இவ்வாறிருக்க சுவிட்சர்லாந்திலும், தலைவர் உயிருடன் இருக்கிறார், மருத்துவம் செய்யவேண்டி இருக்கிறது.
பெருமளவு பணம் தேவை. மகள் துவாரகா உயிருடன்தான் இருக்கிறார் எனச்சொல்லி ஒரு குழுவினரால் பெருமளவு பண வசூல் இடம்பெற்றுக்கொண்டிருந்த செய்திகளும் வெளிவந்த வண்ணமே இருந்தன. இதனையும் பலர் நம்பி பணம்கொடுத்துள்ள விடயங்கள் இந்நாளில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வர ஆரம்பித்துள்ளது. துவாராகா போன்று ஒரு பெண்ணை தயார் செய்து தெலைபேசியில் பேசவைத்து பலரிடம் இந்த பணவேட்டை மிகநுட்பமான முறையில் சுவிசில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நம்ம மறுத்த பல முக்கிய நபர்கள் முன்னிலையில் குறித்த பெண்ணை முகமூடி அணியவைத்து நேரில் சந்தித்து பேச வைத்தும் பல தில்லாலங்கடி வேலைகள் சுவிசில் அரங்கேறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதற்கு பின்னால் ஒரு கும்பல் இருப்பதாகவும் சுவிசில் விடுதலைப்புலிகளின் நிதிப்பொறுப்பாளராக இருந்த ஒருவரின் தலமையில்தான் இடம்பெறுவதாகவும் பின்நாளில் புலம்பெயர் ஊடகம் ஒன்றால் தோல்உரித்து காட்டப்பட்டது.
துவாராக என பேசியது.. பணம் வசூல் செய்தது எல்லாமே ஒரு குழுவினரின் போலியான செயல் எனவும் துவாரகா என சொல்லப்பட்ட அந்த பெண் சுவிட்சர்லாந்தில் வசிக்கக்கூடியவர் எனவும் பின்னாளில் யெர்மனியில் இருந்து இயங்க கூடிய ஒரு ஊடகத்தினால் ஆதாரங்களோடு துகிலுரியப்பட்டது. இதனை தொடர்ந்து சுதாகரித்துக்கொண்ட அந்தக்கும்பல் டென்மார்க்கில் இருக்கும் தலைவரின் தங்கை என அறியப்படும் அருணா என்பவருக்கு வீசிய வலையில் அவரும் சிக்கிக்கொண்டார்.
திடீரென அவர் தலைவர் மற்றும் மதிவதனி உட்பட துவாராகவுடன் உணவு அருந்தியதாக காணொளி ஒன்றை வெளியிட்டு மீண்டும் இந்த விடயங்களை பரபரப்பாக்கினார். எல்லோரும் நலமாகவே இருக்கிறார்கள் மிக விரைவில் வெளிப்படுவார்கள் என்கின்ற விடயங்களை பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.
பலரும் இந்த காணொளி உண்மை என நம்பினாலும் பலர் இது நாடகம் என்பதை மறுக்கவும் இல்லை. இப்படி துவாரகா தலைவர் மற்றும் மதிவதனி தொடர்பான நாடகங்கள் அரங்கேறிகொண்டிருந்த வேளையில் கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கும் பொய்யாகவே இருக்கும் என்ற சந்தேகத்தை உண்டுபண்ணியது என்னமோ உண்மைதான்.
அவ்வாறு மக்களின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக செத்துப்போக ஆரம்பிக்கும் தருணங்களின் சரியான நெருப்பை மூட்டிவிடும் வேலைகளை மிகச்சரியாகவே மோசடிக்கும்பல் திட்டமிட்டு நிகழ்த்திக்கொண்டிருந்தது. இந்த விடயங்கள் தொடர்பாக டென்மார்க்கில் இருக்கும் தலைவரின் அண்ணன் மனோகரன் அவர்களது மகன் துவாரகா எங்களுடன் பேசவில்லை. அவர் இருக்கிறாரா இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது..? இருந்தால் எங்களிடம் பேசி இருப்பார். பெரியம்மா அதாவது அருணா ஏன் இப்படி காணொளி வெளியிட்டார் என்பது புரியாத புதிராகவே இருப்பதாக குறிப்பிடுகிறார். மேலும் அதற்கு பிறகு தங்களுடன் தொடர்பை பேணுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து அருணா வெளியிட்டது யாரோ பின்புலத்தில் இருந்து சொல்லிக்கொடுத்து பேசிய காணொளிதான் என்பது புலனாகிறது. எது எப்படியோ இந்த விடயங்களுக்குள் முழுமையாக சென்று ஆராய நாம் விரும்பவில்லை. காரணம் இன்று மக்கள் விழிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். யாரும் முட்டாள்கள் அல்ல. மக்களே உண்மை எது பொய் எது என்பதை சரியாக தீர்மானிக்க பழகிவிட்டார்கள் என்பதே உண்மை.
மாவீரர் நாள் நெருங்க நெருங்க சதிகாரர்களின் திட்டங்களும் பொய்த்துப்போனதான் மாவீர் நாளுக்கு முன்னர் வலைவீசப்பட்டவர்கள்தான் தமிழகத்தில் எஞ்சியிருக்கும் தமிழ்தேசியத்தை நேசிக்கும் அல்லது அதை வைத்து அரசியல் செய்பவர்களாகிய சீமான உட்பட இயக்குனர் கௌதமன். அந்த வலையில் கௌதமன் வசமாக சிக்கிக்கொண்டு ஊடக சந்திப்பனையும் வழங்கி விட்டு போலி துவாரகாவின் உரையை பார்த்து பிதுங்கிப்போயிருக்கிறார்.
சதிகாரக்கும்பல் வீசிய கடைசி வலையில் சீமான் ஒருவாறு தப்பித்துக்கொண்டதாகவே உணரமுடிகிறது. துவாரகா எனப்படும் அந்த பெண் ஒரு மணிநேரம் சீமானுடன் பேசியதாகவும் அவர் நடத்தும் மாவீர் மாநாட்டில் இதை அறிவி;க வேண்டும் எனவும் கேட்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்ததில் இருந்தே அதனை அறியமுடியும். ஆனால் முதலில் காணொளியில் தோன்றுங்கள் நாம நிச்சயம் அறிவிக்கிறோம் என சீமான் சொல்லியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஆனால் காணொளி வெளியான பின்னர் அனைவரினதும் நிலைப்பாடு தலைகீழா மாறியுள்ளது. சீமான் தரப்பில் இருந்து இது போலி துவாரகா என்பது போல செய்திகள் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. மறுபக்கம் இயக்குனர் கௌதமனிடம் நாம் தொடர்புகொண்டு கேட்டபோது உண்மையாக இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்.. போலியாக இருந்தால் நிராகரியுங்கள் எனக்கூறி நைசாக நழுவிக்கொள்ளுகிறார்.
எவ்வளவு பெரிய ஒரு விடயத்தை இந்த தமிழக அரசியல்வாதிகள் அசால்டாக சொல்லி மக்களையும் குழப்பிவிட்டு இறுதியில் நழுவிக்கொள்வது அவர்களின் போலி அரசியல்தனத்தையே காட்டுவதாக அமைகின்றது. தங்கள் அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ளுவதற்காக எம் ஈழ விடுதலைப்போராட்டை கூறு போட்டு விற்கிறார்களா அல்லது துரோகிகளுக்கு விலைபோகிறார்களா என்ற கேள்வியினையும் மக்கள் எழுப்பியுள்ளனர்.
ஆரம்பத்தில் சுவிசில் பணவேட்டை நடாத்திய துவாரகா போலி என்பதும் அவரது உண்மையான புகைப்படம் குரல்பதிவுகள் என்பனவும் அவர் மித்துசா எனப்படும் துர்காவ் கன்டோனில் வசிக்கும் பெண் என்பதும் வெளியாகியது. ஆனால் அப்போது போலி என கூறப்பட்டு வெளியான புகைப்படத்திற்கும் தற்போது போலி என பேசப்பட்ட பெண்ணின் உருவத்திற்கும் சற்று வேறுபாடுகள் காணப்படுகின்றது. இதனை சுவிசில் உள்ள மக்கள் நீங்கள்தான் உறுதிப்படுத்தவேண்டும். மித்துசா.. நித்துயா என இரு வேறுபெயர்கள் முன்னுக்கு பின் முரணாக வெளியாகிக்கொண்டிருக்கிறது. அதனை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறோம்.
தற்போது நாம் சொல்ல வந்த விடயம் என்னவெனில் துவாரகா என பேசி மாவீரர் உரை நிகழ்த்தி பெண் உண்மையில் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மகள்தானா.? சுவிட்சர்லாந்தில் இருக்கின்ற தமிழர்கள் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையே… முதலில் துவாரகா உரையாற்றுவார் என புதிதான ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளம் தொடர்பாக சில தகவல்கள்… மாவீரர் நாளுக்கு முன்னர் திடீரென ஆரம்பிக்கப்பட்ட அந்த இணையத்தளத்தின் ஊடாகவே துவாராக உரையாற்றுவர் என செய்திகள் பரப்பப்பட்டது.
சொன்னது போல அந்த இணையத்தின் ஊடாகவே இந்த காணொளியும் வெளியானது. குறித்த இணையத்தளத்தில் சுவிட்சர்லாந்தின் விலாசம் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித தொலைபேசி இலக்கங்களும் குறிப்பிடப்படவில்லை. விலாசத்தை தேடிப்பார்த்தபோது அந்த விலாசத்தில் ஒரு பேக்கரி இருப்பதாகவே எமக்கு தெரிகிறது. எனினும் அது பற்றி மேலும் ஆராய நாம் விரும்பவில்லை.
அடுத்ததாக இந்த துவாரகா தொடர்பாக சுவிட்சர்லாந்தில் வசிக்ககூடிய சாதாரண மக்கள் சிலரிடமும் முன்னாள் போராளிகள் என அறியப்படும் சிலரிடமும் நாம் கருத்துக்களை கேட்டிருந்தோம். அதில் ஒருவர் கூட இது உண்மையான துவாரவாக இருக்க முடியாது என ஆணித்தரமாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சுவிசில் மட்டுமல்ல ஏனைய புலம் பெயர் உறவுகள் கூட இது டுபாக்கூர் என்றே சொல்லிவருகிறார்கள். தமிழகத்தின் பிரபல காட்டுன் வரை கலைஞர் ஒருவர் நிஐ துவாரகாவின் புகைப்படத்துடன் மாவீரர் உரை ஆற்றிய துவாரகாவின் படத்தை ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்த்ததில் துளி கூட ஒத்துப்போகவில்லை என அடித்துக்கூறுகிறார்.
மேலும் தமிழகத்தின் சில அரசியல் விமர்சகர்கள் ஊடகவியளாளர்கள்கூட இது போலி என்பதை கூறிவருகின்றார்கள். அந்த காணொளியை மிகக்கவனமாக உற்றுநோக்கினால் அது ஒரு நேரலை உரை அல்ல என்பது மிகத்தெளிவாக எமக்கும் தெரிகிறது. கிரீன் பேட் வைத்து பெண்ணை நிற்கவைத்து துண்டு துண்டாக பேசவைத்து ஒட்டவைத்து நேரலையாக வெளியிடப்பட்ட காணொளி என்பது தொழில்நுட்பம் தெரிந்த அனைவரும் புரிந்துகொள்ளகூடிய விடயம்.
அன்பார்ந்த புலம்பெயர் மக்களே சுவிட்சர்லாந்து வாழ் மக்களே.. தலைவர் இருக்கிறாரா..? துவாரகா இருக்கிறாரா இல்iலாயா ? உண்மையா பொய்யா என்தற்கு அப்பால் கடினப்பட்டு உழைக்கும் உங்கள் பணத்தை வீணடிக்காது இவ்வாறான போலிகளை நம்பி இழக்காது விழிப்போடு இருங்கள். எங்கள் செய்தியின் நோக்கமும் அதுதான்.. அதுதவிர யாருடைய டி.என்.ஏ யையும் எடுத்து இவர்தான் அவர் அவர்தான் இவர் என்று நிரூபிக்கும் நோக்கமல்ல எமக்கு..
மக்கள் பணம் வீணகாக்கூடாது.. அதுவும் சுவிட்சர்லாந்தில் தற்போது மருத்துவக்காப்பீடு.. வாடகை.. மின்சாரக்கட்டணம்… பொருட்களின் விலை என விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்லும் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளில் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டியது உங்கள் பொறுப்பே.. இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மிக்க நன்றி.