துர்காவ் மாகாணத்தில் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி தேசிய விடுமுறை கழிந்ததாக துர்காவ் கன்டோனல் தெரிவித்துள்ளது.
எனினும் வியாழன் மாலை மற்றும் வெள்ளி இரவுகளில் கன்டோன் முழுவதிலும் இருந்து சுமார் 20 தீ விபத்துகள்இ சட்ட விரோதமாக பட்டாசு கொளுத்துதல் மூலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைதி சீர்குலைவு போன்ற புகார்களும் கிடைத்துள்ளன.
மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை, கன்டோனல் எமர்ஜென்சி கால் சென்டருக்கு கன்டோன் முழுவதும் இருந்து சட்டவிரோத வானவேடிக்கை மற்றும் அமைதிக்கு இடையூறுகள் குறித்து 16 புகார்கள் வந்ததாக கன்டோனல் காவல்துறை தெரிவிக்கிறது.
துர்காவ்
மேலும் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட சொத்து சேதம் தொடர்பாக இரண்டு குற்றங்கள் பதிவாகியுள்ளன. இரவு 11 மணிக்குப் பிறகு, க்ரூஸ்லிங்கனில் உள்ள தீயணைப்புத் துறையினர் ஸ்பைஷால்டென்ஸ் திராசவில் எரியும் கிரில்லை அணைக்க வேண்டியிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இரண்டு தீ விபத்துக்கள் பற்றிய முறைப்பாடும் கிடைத்துள்ளது. அவை பட்டாசு விபத்துக்கள் என அறியமுடிகிறது. எனீனும் காயமடைந்தவர்கள் குறித்து துர்காவ் கன்டோனல் காவல்துறை இதுவரை எந்த தகவலும் வெளயிடவில்லை.