துர்காவ் கன்டோனில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் : இருவர் காயம் துர்காவ் கன்டோன் ரோதன்ஹவுசனில் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தின் போது இரண்டு பயணிகளும் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். அவசர சேவை மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை.
துர்காவ் கன்டோனல் காவல்துறையின் கண்டுபிடிப்புகளின்படிஇ இன்று 11:30 அளவில் ரோதன்ஹவுசென் மற்றும் மெட்லென் இடையே ஒரு புல்வெளியில் இருந்து ஹெலிகாப்டர் புறப்படும்போது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 55 வயதான விமான பயிற்றுவிப்பாளர் மற்றும் 58 வயதான மாணவர்விமானி ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். ஹெலிகாப்டருக்கு ஏற்பட்ட சேதத்தை இன்னும் கணக்கிட முடியவில்லை என கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
(c) Kapo Thuragau
துர்காவ் கன்டோனல் காவல்துறையின் தடயவியல் சேவை விபத்து நடந்த இடத்தில் ஆதாரங்களைப் பாதுகாத்து நிபுணர்களால் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.