துர்காவ் கன்டோனில் உள்ள (Märstetten) மார்ஸ்டெட்டன் இல் புதன்கிழமை மாலை நடந்த பயங்கர விபத்தில் 24 வயது ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த நபர் வீதியை விட்டு விலகி வீட்டின் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானதாலையே மரணம் நிகழ்ந்துள்ளது.
புதன்கிழமை மாலை இரவு 7 மணிக்கு சற்று முன், வாகனம் வீட்டு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதாக அவசர அழைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்தது .

24 வயதான சாரதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்துள்ளவர் 24 வயதான போர்த்துகீசியர் என தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்த 43 வயது நபர் மிதமான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
துர்காவ் கன்டோனல் காவல்துறை முதற்கட்டக் கண்டுபிடிப்புகளின்படி, ஓட்டுநர் தனது கார் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் சுவரில் மோதியயதாக தெரிவிக்கிறது. வீடு மற்றும் முன்பக்கத்தில் இருந்த இரு வாகனங்களுக்கும் பகுதியளவு அளவு சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரையில் கணக்கிடப்படவில்லை. விபத்துக்கான காரணம் தொடர்பில் துர்காவ் கன்டோனல் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் துர்காவ் கன்டோனல் காவல் துறையின் தடயவியல் சேவை சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்கான காரணத்தை தெளிவுபடுத்துவதற்கு ஆதாரங்களை திரட்டியுள்ளது.
ஆதாரம்: துர்காவ் கன்டோனல் போலீஸ்
பட ஆதாரம்: துர்காவ் கன்டோனல் போலீஸ்