துர்காவ் கன்டோனில் ஏ.டி.எம் இயந்திரம் வெடிவைத்து தகர்ப்பு வெள்ளிக்கிழமை இரவு, துர்காவ் கன்டோனின் tobel பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தை அடையாளம் தெரியாத நபர்கள் வெடிக்கச் செய்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீசார் சாட்சிகளை தேடி வருகின்றனர்.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், அதிகாலை 3 மணிக்குப் பிறகு, கன்டோனல் எமர்ஜென்சி கால் சென்டருக்கு மெயின் தெருவில் உள்ள திருட்டு அலாரம் ஒலித்தது. இதனை தொடர்ந்து துர்காவ் கன்டோனல் காவல்துறையினரின் அவசர சேவைகள் உடனடியாக இடத்திற்கு வந்தன.
வங்கிக் கிளையின் நுழைவு வாயில் பகுதியில் சேதமடைந்த ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்தனர் . St.Gallen கன்டோனல் காவல்துறையினரின் ஆதரவுடன் துர்காவ் கன்டோனல் காவல்துறையினரால் உடனடியாகத் தொடங்கப்பட்ட தேடுதல் வேட்டை இதுவரை வெற்றிபெறவில்லை.

இதுவரை துர்காவ் கன்டோனல் காவல்துறையின் கண்டுபிடிப்புகளின்படி , அடையாளம் தெரியாத ஒரு குற்றவாளி ஏடிஎம்-ஐ வெடிக்கச் செய்துள்ளார். போலீசாரின் வருகையயை அறிந்து கொண்ட அவர்கள் அவ்விடத்தில் இருந்து கொள்ளையடிக்க முன்னமே தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துர்காவ் கன்டோனல் காவல்துறை மற்றும் ஜூரிச் தடயவியல் நிறுவனம் ஆகியவற்றின் தடயவியல் சேவையின் நிபுணர்கள் குற்றம் நடந்த இடத்தில் ஆதாரங்களைசேகரித்துள்ளனர். இச்சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் பல லட்சம் பிராங்குகளுக்கு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது..
அரசு வக்கீல் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன், துர்காவு கன்டோனல் போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த நடவடிக்கையில் பெடரல் போலீஸ் அலுவலகத்தின் பிரதிநிதியும் ஈடுபட்டிருந்தார்.
குற்றவாளியைப் பற்றிய தகவலை வழங்கக்கூடியவர்கள் அல்லது அவதானித்தவர்கள் 058 345 22 22 என்ற எண்ணில் துர்காவ் கன்டோனல் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
ஆதாரம்: துர்காவ் கன்டோனல் போலீஸ்