திடீரென பற்றி எரிந்த பயணிகள் கார் – Siebnen SZ இல் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை சீப்னெனில் பயணிகள் காரில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பில்: மேலும் தெரியவருகையில்
வெள்ளிக்கிழமை காலை, 9:30 மணிக்குப் பிறகு, 26 வயது கார் ஓட்டுநர், 25 வயது பயணி ஒருவருடன், சீப்னெனில் இருந்து ஷ்வாண்டென் நோக்கிச் சென்றார்.

அப்போது வாகனத்திற்குள் புகை நாற்றம் வருவதை அவதானித்துள்ளனர். அவர்கள் வாகனத்தை விட்டு வெளியேறி வாகனத்தின் முன் பகுதியை திறந்தபோது இன்ஜின் மற்றும் கார் முழுவதும் தீப்பிடித்தது .
Schübelbach தீயணைப்புத் துறையினர் வாகனத்தின் தீயை விரைவாக அணைக்க உதவினர் . ஆரம்ப கண்டுபிடிப்புகளின்படி, முன்புறத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(c) Kapo SZ