தமிழ் ஈழ மகளீர் கால்பந்து அணி இறுதிச்சுற்றில் இரண்டாம் இடம் – அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான மகளீர் கால்பந்து அணியினரின் உதைப்பந்தாட்டப்போட்டி சுற்றுகள் அண்மையில் நோர்வே நாட்டில் ஆரம்பமாகியிருந்தது.
இப்போட்டியில் கலந்துகொண்ட தமிழ்ஈழ பெண்கள் அணியினர் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியிருந்தனர். இந்நிலையில் நேற்று 08/06/2024 அன்று நடைபெற்று முடிந்த இறுதிச்சுற்று உதைபந்தாட்டப்போட்டியில் புலம்பெயர் தமிழ்ப் பெண்பிள்ளைகள் இரண்டாம் இடத்தைப்பெற்று ஒட்டுமொத்த தமிழ் ஈழ மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இறுதிக்களத்தில் முதல் கோல் அடித்த தமிழ் ஈழம் அணியினர் மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் விளையாட்டில் ஈடுபட்டு எதிர் அணிக்கு மிகப்பெரிய சவாலாக மாறியிருந்தனர்.
சுவிஸ், பிரான்ஸ், நோர்வே, கனடா நாட்டில் உள்ள பெண்பிள்ளைகள் ஒன்றிணைந்து தமிழ் ஈழம் அணி உருவாக்கப்பட்டிருந்தது.
இறுதி வரை முன்னணியில் நின்ற தமிழ் ஈழ அணியினரின் இலக்கு, இறுதி 40 நிமிடங்களில் கைநழுவி சென்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டனர்.
எனினும் இது சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. எந்த ஈழ கொடிக்கு சர்வதேச நாடுகள் தடைவிதித்தனவோ அதே புலிக்கொடி இன்று நோர்வே நாட்டு மைதானத்தில் உயரப்பறந்து எம் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.