ஜெனீவாவில் போலீசார் அதிரடி : இந்திய உணவகங்களில் 6 பேர் கைது.!!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகர காவல்துறை, மனித கடத்தல் சந்தேகத்தின் பேரில் 6 பேரை கைது செய்துள்ளது. இந்த சம்பவம், பல இந்திய உணவகங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையை தொடர்ந்து நடந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 20 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் விசாரணையில், சிலர் சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்திற்கு அழைத்து வரப்பட்டு, இந்த உணவகங்களில் வேலை செய்ய வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு சாதாரண ஊதியத்தை விட மிகவும் குறைவான சம்பளம் வழங்கப்பட்டதுடன், வரி அல்லது சமூக பாதுகாப்பு கட்டணங்கள் பதிவு செய்யப்படவில்லை.
இது தொழிலாளர்களின் உரிமைகளை மீறும் செயலாக கருதப்படுகிறது. ஜெனீவாவில் உள்ள ஜோன்க்ஷன், பிளைன்பாலைஸ், மற்றும் காரூஜ் (Jonction, Plainpalais and Carouge) பகுதிகளில் 4 உணவகங்கள் மற்றும் பல வீடுகளில் காவல்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில், சட்டவிரோதமாக வேலை செய்ய வைக்கப்பட்டவர்களின் மோசமான நிலை உறுதி செய்யது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் இந்தியாவிற்கு தப்பிச்செல்ல வாய்ப்புள்ளதாக கருதி, விசாரணைக்கு முன்பு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், வெளிநாடுகளில் தொழிலாளர்களை சட்டவிரோதமாக அழைத்து வந்து, அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் பிரச்சினைகளை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. ஜெனீவா காவல்துறை, இந்த வழக்கை முழுமையாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.
ஜெனீவா காவல்துறை, இந்த வழக்கை முழுமையாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பும், நீதியும் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.
இந்த வழக்கு, உணவகத் தொழிலில் நடக்கும் சில முறைகேடுகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. சுவிட்சர்லாந்து அரசு, இதுபோன்ற சட்டவிரோத செயல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.