ஜெனீவாவில் ஐ.நா. முன் மேலாடையின்றி போராட்டம்: ரஷ்யாவை விலக்கக் கோரி பெண் ஆர்வலர்கள்** வியாழன் அன்று ஜெனிவாவில் உக்ரேனிய பெண்ணிய எதிர்ப்பு அமைப்பான Femen என்ற அமைப்பினர் பரபரப்பு சம்பவம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
உக்ரேனிய இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு செயற்பாட்டாளர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) கட்டிடத்தின் முன் மேலாடையின்றி உக்ரேனியக் கொடியை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.”உடைந்த நாற்காலி” எனப்படும் நன்கு அறியப்பட்ட அடையாளத்தை சேதப்படுத்த முயன்றனர்.
பிரம்மாண்டமான முக்கால் மர கதிரையின் கால்களை அறுத்த பெண்கள், “ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து விலக்கி விடுங்கள்” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
போலீசார் விரைந்து வந்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளதாக ஜெனீவா பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அதிர்ஷ்டவசமாக, “உடைந்த நாற்காலி” சின்னம் அழிக்கப்படவில்லை.
பெண் இயக்கம் 2008 இல் உக்ரேனிய தலைநகர் கியேவில் நிறுவப்பட்டது, அதன் பின்னர் கண்ணைக் கவரும் மற்றும் ஆத்திரமூட்டும் போராட்டங்களுக்கு பெயர் பெற்ற இயக்கமாக இது இருந்துவருகின்றது. அவர்களின் நடவடிக்கைகள் பெரும்பாலும் பாலியல் சுற்றுலா, ஓரினச்சேர்க்கை மற்றும் மத நிறுவனங்கள் போன்ற பிரச்சினைகளை குறிவைக்கின்றன.
இந்த நிலையில், ஆர்வலர்கள் அரசியல் அறிக்கை ஒன்றை வெளியிட விரும்பினர். உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து விலக்கி விடுங்கள் என்ற கோசத்துடன் மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் பொதுமக்களிடையே விமர்சனத்தையும் ஆதரவையும் ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தின் கலைஞரான டேனியல் பெர்செட்டின் கலைப் படைப்பான ஒற்றைக்கால் உடைந்த நிலையில் காணப்படும் மரக்கதிரை சின்னம், போர் வலயங்களில் பொதுமக்கள் மீது கண்ணிவெடிகளின் பேரழிவு விளைவுகளை குறிப்பதோடு ஜெனீவாவில் நன்கு அறியப்பட்ட அடையாளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.