சொலுத்தூர்ன் Olten பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது.!! சந்தேகத்திற்கிடமான இருவர் குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சொலுத்தூர்ன் மாகாணத்தில் இரு வேறு நபர்கள் போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் :-
ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 1, 2023 அன்று, இரவு சுமார் 9:45 மணியளவில், Oberbuchsiten இல் வசிப்பவர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் அங்குள்ள வீடுகளைச் சுற்றி பதுங்கி, பின்னர் சைக்கிளில் தப்பிச் செல்வதைக் கவனித்தார்.
சொலுத்தூர்ன் Olten பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது.!!
பின்னர் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சொலுத்தூர்ன் கன்டன் காவல்துறையில் இருந்து ரோந்து போலீசார் தேடுதல் வேட்டையினை மேற்கொண்டார்கள். தேடுதலின் போது, போலீசார் சந்தேக நபரை அரை மணி நேரத்திற்குப் பிறகு Oberbuchsiten இல் கண்டுபிடித்து அவரை தடுத்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டார்கள்.
இதன் போது திருடிய பொருட்களை காரில் எடுத்துச்சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் 34 வயதான அல்ஜீரியர் என பின்னர் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உடனடியாக கன்டன் போலீசாரினால் அந்நபர் கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
மேலும் (OLTEN) ஓல்டனில், ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றபோது சந்தேகத்திற்கிடமான முறையில் அவதானிக்கப்பட்டுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு, எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவரை கட்டிடத்திற்கு வெளியே போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலதிக விசாரணைகளுக்காக 26 வயதான அல்பேனியா நாட்டைச்சேர்ந்த அவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்