சொலுத்தூர்ன் ரயில் நிலையம் அருகே கத்திக்குத்து சம்பவம் – ஒருவருக்கு காயம், சந்தேகநபர் கைது
2025 ஜூன் 21, சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், சுவிட்சர்லாந்தின் சொலுத்தூர்ன் நகரில் இருவர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தாக்குதலாக மாறியது.
இந்த சண்டையின் போது, ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தார். சம்பவ இடத்திலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்குத் கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை குறித்து கூடுதல் தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சொலுத்தூர்ன் கான்டோன் காவல்துறை, சம்பந்தப்பட்ட சந்தேக நபரை கண்டுபிடித்து கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர் 43 வயதான ஒரு சுவிஸ் குடிமகன் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தற்போது அவர் மீது மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல் எதனால் ஏற்பட்டது, தாக்குதலுக்குப் பின்னால் இருந்த காரணம் என்ன என்பது பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
@Kantonspolizei Solothurn