சூரிச் அடில்ஸ்வில் முருகன் ஆலயத்தின் முத்து விழா 2024 சுவிட்சர்லாந்தின் சூரிச் ஶ்ரீசிவசுப்பிரமணிய தேவஸ்தானத்தின் 30வது ஆண்டின் சிறப்புவிழாவான முருகனுக்கு முத்துவிழா சனிக்கிழமை (14.09.2024) சூரிச்மாநிலத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
குறித்த முத்துவிழா நிகழ்வில் ஆன்மிக சிறப்புரைகள், வாழ்த்துரைகள், கலைமாமணி வாணிசர்மா அவர்களின் நெறியாள்கையில் இடம்பெற்ற நாட்டிய நிகழ்வுகள், சுவிஸ் மக்களின் பஜனைநிகழ்வுகள், பட்டிமன்றம், 30 வருடகால ஆலயநினைவுகள் அடங்கிய நூல்வெளியீடு உட்பட பல்வேறு நிகழ்வுகளும் இடம் பெற்றருந்தன.

நிகழ்வுகள் பல சமய குருமார்களும் ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் கலைத்துறையைச்சேர்ந்தவர்கள் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.