சுவிட்சர்லாந்து விமான சேவை நிறுவனம் மீண்டும் இலங்கைக்கான விமானப் பயணங்களை ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினம் இந்த விமானப் பயணங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சூரிச் – கொழும்பு நகரங்களுக்கு இடையில் LX 8068 என்ற விமானம் 125 பயணிகளுடன் இலங்கை வருகை தந்தது.

இலங்கை விஜயம் செய்த பயணிகள் கண்டிய கலாச்சார நடனத்துடன் வரவேற்கப்பட்டதுடன் இவர்களுக்கு இலங்கைத் தேயிலை பொதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த விமானப் பயணங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கட்டமை வரவேற்கப்பட வேண்டியது என இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் பொர்கலர் தெரிவித்துள்ளார்.