சுவிஸ் மின்னணு அடையாளத்திற்கு எம்.பி.க்கள் ஆதரவு
சுவிட்சர்லாந்தில் புதிய மின்னணு அடையாள அட்டை சட்டம் (Electronic ID – e-ID) தொடர்பாக நாடாளுமன்றத்தில் பெருமளவிலான ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பருவக் கூட்டத்தொடர் முடிவடைந்து வரும் நிலையில், வியாழக்கிழமையன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள், இந்த சட்டத்தை ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கூறி, அதன் மீதான ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்த மின்னணு அடையாள அட்டை திட்டம், எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் மக்களவை வாக்கெடுப்பில் (Referendum) வாக்காளர்களால் முடிவு செய்யப்பட உள்ளது. இந்த e-ID திட்டம் குறித்து ஆரம்பத்தில் எதிர்ப்புகள் இருந்தாலும், தற்போது இது அதிக பாதுகாப்பு கொண்ட, அரசாங்கத்தின் உடைமையாகும் முற்றிலும் நவீன கட்டமைப்பின் மீது அமைந்துள்ளதாக மக்கள் பிரதிநிதிகள் தெரிவிக்கிறார்கள்.

முக்கியமாக, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக இந்த திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். இது ஒரு சாதாரண தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்கால நிர்வாகம் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்புக்கான முக்கிய அடித்தளமாக கருதப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் சுவிட்சர்லாந்தில் மக்கள் அரசு வழங்கும் சேவைகளை மின்னணு முறையில், பாதுகாப்பாகவும், எளிதாகவும் பயன்படுத்த முடியும். வருங்காலத்தில் இந்த e-ID பல தேவைகளுக்குப் பயன்படும்
முடிவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை இந்த திட்டத்தை ஆதரிக்கத் தூண்டி வருகிறார்கள். ஏனெனில் இது சுவிட்சர்லாந்தின் டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெறவிருப்பதால், பொதுமக்கள் இது குறித்து நன்கு தெரிந்து, ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்பது அரசியல் வட்டாரங்களின் வேண்டுகோளாகும்.
@Keystone SDA