சுவிஸ் மாகாணமொன்றில் வீசிய பலத்த சூறாவளி .!! இன்று வெள்ளிக்கிழமை காலை சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளை புயல் தாக்கியுள்ளதோடு பலத்த காற்று வீசியுள்ளது.
கன்டோன் உரி மாகாணத்திலுள்ள ஏரி ஓரத்தில் அமைந்துள்ள அல்ட்டோர்ப் பகுதியில் இரவு நேரத்தில் மணிக்கு 128 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி வீசியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயல் காரணமாக, பல கேபிள் கார்கள் தற்காலிகமாக இயங்குவதை நிறுத்தியிருந்தன. பின்னர் படிபடியாக சேவையில் ஈடுபட ஆரம்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, திங்கட்கிழமை வரை குறித்த புயல் சீற்றமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இது தாழ்வான பகுதிகளிலும் பரவுகிறது.
வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை பிற்பகல் வரை வலுவான கட்டம் எதிர்பார்க்கப்படுகிறது எனவும் வானிலை ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.