சுவிஸ் தேசிய தினமன்று பட்டாசு வெடிப்பதற்கு சில கான்டன்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிவரும் கடுமையான வெப்பநிலை காரணமாக வானவேடிக்கைகள் மற்றும் பட்டாசு கொளுத்தும் நடவடிக்கைகளுக்கு வரையறை விதிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும், தேசிய தினமான ஆகஸ்ட் முதலாம் திகதி சில கான்டன்களில் வான வேடிக்கை மற்றும் பட்டாசை வெடிப்பதற்கு அனுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் முழுவதிலும் கடுமையான வெப்பநிலையுடன் காலநிலை நீடித்து வந்த நிலையில், பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
எனினும் அண்மைய நாட்களாக நிலவி வரும் குளிருடனான காலநிலை காரணமாக பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேர்ன், சென் கேலன், ஸ்காவுட்சன், துர்கு, எப்பென்செல், ஜூக், யூரி, ஒப்வால்டன் மற்றும் ரிக்கினோ ஆகிய கான்டன்களில் இவ்வாறு அனுமதி வழங்கப்படுகின்றது.