சுவிஸ் – சீன விமான சேவையில் பாதிப்பு சுவிட்சர்லாந்திற்கும் சீனாவிற்கும் இடையிலான விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் வாரம் சீனாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.
குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் காரணமாக எதிர்வரும் 26ம் திகதி மற்றும் பெப்ரவரி 2ம் திகதி ஆகிய திகதிகளில் பயணம் செய்யவிருந்த விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் – சீன விமான சேவை
பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக சீனா கடந்த 8ம் திகதியே எல்லைகளை திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், போதியளவு பயணிகள் இல்லாத காரணத்தினால் இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை முன்னெடுக்க முடியாதுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ம் திகதி ஜெனீவாவிற்குகும் பெய்ஜிங்கிற்கும் விமானப் பயணமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.
சீனா மீது தடைகளை விதிக்க தயங்கும் சுவிஸ் அரசாங்கம்?
சீனா மீதுது தடைகளை விதிக்க சுவிட்சர்லாந்து தயக்கம் காண்பித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவில் வாழ்ந்து வரும் உய்குர் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் மீது பிரயோகித்து வரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு சீனா மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை அறிவித்திருந்தது.
எனினும், சுவிட்சர்லாந்து இதுவரையில் தடைகளை விதிப்பதற்கான எவ்வித முனைப்புக்களை எடுக்கவில்லை பிரபல பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இது தொடர்பிலான தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீனா மீது அழுத்தங்களை பிரயோகிப்பது குறித்து கடந்த டிசம்பர் மாதம் சுவிஸ் அரசாங்கம் அதிகாரபூர்வ பேச்சு நடத்திய போதிலும் இறுதி தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.