சுவிஸ் சாரதிகளுக்கு அரசு எச்சரிக்கை.!! “சத்தம் போட்டால் சோலி முடிஞ்சு” சுவிட்சர்லாந்தில் தேவையின்றி அதிக ஒலி எழுப்பும் வாகன சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒலி எழுப்பியதன் காரணமாக கடந்த 2019ம் ஆண்டில் சுவிட்சர்லாந்திற்கு சுமார் 2.8 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிஸ் சாரதிகளுக்கு அரசு எச்சரிக்கை.!! “சத்தம் போட்டால் சோலி முடிஞ்சு”
குறிப்பாக இதில் அதிகளவான செலவு சுகாதாரத்துறைக்காக செலவிடப்பட்டுள்ளது. ஒலி மாசடைவதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் முனைப்பு காட்டி வருகின்றது.
வீதிகளில் அதிகளவு ஒலி எழுப்புதல் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே தேவையின்றி வாகனங்களில் கூடுதல் ஒலி எழுப்பும் சாரதிகளுக்கு எதிர்வரும் காலங்களில் அபராதம் விதிக்கும் நடைமுறையொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.