சுவிஸ் கலைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை..!! சுவிட்சர்லாந்தில் கலைஞர்கள் வறுமை நிலையை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பான்மையான கலைஞர்கள் இவ்வாறு வறுமை நிலையில் வாழ்க வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்ட நேரம் பயிற்சி மற்றும் நீண்ட நேரம் பணியாற்றிய போதிலும் வறுமையிலிருந்து மீள முடியாத நிலை காணப்படுவதாக கலைஞர்கள் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் சுமார் 86 விதமான கலைஞர்களின் தங்களது தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. அனேகமான கலைஞர்கள் வருடம் ஒன்றுக்கு 18000 முதல் 25000 பிராங்குகள் வரையில் வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த வருமானமானது போதுமானது அல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே கலைத்துறையில் நிபுணத்துவம் உடைய முதுநிலை பட்டம் பெற்றுக்கொண்ட கலைஞர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வேறும் தொழில்களில் ஈடுபட நேரிட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக ரெஸ்டாரண்ட், விற்பனை போன்ற துறைகளில் தொழில்களில் ஈடுபட நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலைஞர்களுக்கு நீண்ட காலமாக சம்பள உயர்வு கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. (source:- Tamilinfo)