சுவிஸ் எல்லையில் ஏரியில் மிதக்கும் சடலங்கள் சுமார் ஏழு மாதங்களுக்கு முன் மாயமான சுவிஸ் நாட்டவர் ஒருவர், மூன்று நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட உடல்
ரைன் நதியும் கான்ஸ்டன்ஸ் ஏரியும் சந்திக்கும் இடத்தில் படகில் சென்றுகொண்டிருந்த ஒருவர், உயிரற்ற உடல் ஒன்றைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
அந்த உடலை அடையாளம் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளின்போது, அது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாயமான சுவிஸ் நாட்டவர் ஒருவரின் உடல் என தெரியவந்துள்ளது.

அந்த 79 வயது நபர் சுவிட்சர்லாந்திலுள்ள Chur என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டிருக்கலாம் என சுவிஸ் அதிகாரிகள் கருதுவதாக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட ஏரி, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.
அத்துடன், அந்த உடலை ஜேர்மன் அதிகாரிகள்தான் கண்டுபிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பலரது உடலங்கள் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்பு ரைன் நதி மற்றும் கான்ஸ்டன்ஸ் நதிகளில் தற்போது கண்டுபிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சடலங்கள் நீரின் அடியில் புதையுண்டு இருந்திருக்கலாம் எனவும் தற்போது ஏரிகள் நிரம்பி பெருக்கெடுப்பதால் அவை வெளியில் வந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.