சுவிஸ்காம் நிறுவனமானது அதன் சந்தா மாதிரியை மாற்றி, விலைகளை அதிகரிக்கும் என அறிவித்துள்ளது.
ஜூலை 24 முதல், சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சியை உள்ளடக்கிய சுவிஸ்காம் நிறுவனம் தனது inOne Home என்ற சேவையை கைவிடுகிறது.

அதற்கு பதிலாக Basic Home என்ற புதிய சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இது தற்போதைய இணைய வேகத்தை விட அதிவேக இணையத்தை வழங்குவதால், சந்தாவின் விலையும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இது ஒரு மாதத்திற்கு 50 பிராங்குகளிலிருந்து 59.90 பிராங்குகளாக அதிகரிக்கும். புதிய தொகுப்பிற்கான மாற்றம் தானாகவே செயற்படுத்தப்படும் எனவும், அதிக சந்தா விலையை செலுத்த விரும்பாத எவரும் கூடிய விரைவில் சுவிஸ்காம் நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.