சுவிஸில் வேககட்டுப்பாட்டு கமராவுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் நேற்று ஆகஸ்ட் 29 வியாழக்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் Schwyz கன்டோனல் காவல்துறைக்கு சொந்தமான மொபைல் வேக கட்டுப்பாட்டு கமரா இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவுக்குப் பிறகு, ஷ்விஸ் கன்டோனல் காவல்துறையின் செயல்பாட்டு மையம், (Immensee) “இம்மென் சே இல்” உள்ள A4 நெடுஞ்சாலையில் அதிவேக கட்டுப்பாட்டு கமரா எரிவதாகப் பல புகார்களைப் பெற்றது.
உடனடியாக Küssnacht தீயணைப்புப் படை பட்டதோடு ஒரு பொலிஸ் ரோந்து படையும் தளத்திற்கு விரைந்திருந்தது. எனினும் அங்கு தீ பரவல் தொடர்பான எந்த காட்சிகளை யும் அவர்கள் காணவில்லை.

மோசமாக சேதமடைந்த வேக கட்டுப்பாட்டு கமராவை மட்டுமே காணமுடிந்தது. கேமராவில் பல கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பகுதி உடைக்கப்பட்டு அதற்குள் தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த நாசகார சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்திற்கிடமான அவதானிப்புகள் அல்லது நபர்கள் அல்லது வாகனங்கள் பற்றிய தகவல்களை வழங்கக்கூடிய எவரும் 041 819 29 29 என்ற எண்ணில் Schwyz கன்டோனல் பொலிஸ் செயல்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.