சுவிஸில் வெள்ளத்தினால் மூழ்கிய நெடுஞ்சாலை : தொடரும் அபாய நிலமை வார இறுதியில் சுவிட்சர்லாந்து முழுவதும் புயல்கள் மேலும் நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தம் காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டது.
ரோன் நதி அதன் கரைகளை உடைத்து சாலையை மூடியதால், சிரே மற்றும் சியோனுக்கு இடையிலான A9 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. மேலும் அருகிலுள்ள பல சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
ரோன் நதியில் ஓட்டம் ஆபத்தான கட்டத்தை அடைந்ததால் அதன் அருகிலுள்ள தொழில்துறை பகுதியை அதிகாரிகள் காலி செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் வலாய்ஸ் பகுதியில் உள்ள சாஸ் குறுன்ட் கிராமம் சிதைந்துள்ளது- மேலும் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் ஆல்ப்ஸுக்கு தெற்கே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. வெள்ளத்தினால் டெசினோவில் உள்ள மாகியா பள்ளத்தாக்கு மற்றும் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு ரயில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
நிலமைகளை சீர்படுத்த ஹெலிகாப்டர்கள் மூலம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.