சுவிஸில் விழுந்து நொறுங்கிய விமானம். ஒருவர் பலி..!! சுவிட்சர்லாந்தின் சொலுத்தூர்ன் கன்டோனில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சொலுத்தூனிலுள்ள கிரென்சன் விமானநிலையத்துக்கு அருகாமையில் உள்ள புல்வெளியிலையே குறித்த விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.
(c) SRF
குறித்த விமானத்தில் பரசூட்டில் பறக்கும் 12 பயணிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளா முன்னரே 11 பயணிகள் பரசூட்டின் உதவியுடன் கீழே குதித்து உயிர் பிழைந்துள்ளனர்.
எனினும் விமானி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த விபத்து ஏன் நடந்தது என்பது தொடர்பாக கன்டோனல் போலீசார் உட்பட புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.