சுவிஸில் ரேடார் எச்சரிக்கை கருவி ஆர்டர் செய்தவருக்கு அபராதம் சுவிட்சர்லாந்தில் ரேடார் எச்சரிக்கை கருவிகளை (Radar warning devic) பயன்படுத்துவது சட்டவிரோத செயலாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஆர்கோவைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் ரேடார் எச்சரிக்கை சாதனங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து சுங்க அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
அராவ் பகுதியில், 41 வயதான ஒருவர் விலையுயர்ந்த ஆன்லைன் ரேடார் கருவியை ஆர்டரைச் செய்தார். அது இப்போது அவரை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.
ரேடார் டிடெக்டர்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடிவு செய்த அவர் அமேசன் இணையத்தளத்தில் சுமார் 74 யூரோக்கள் விலைமதிப்புள்ள இரண்டு ரேடார்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.

ஆர்டர் அவரது வீட்டு முகவரிக்கு நேரடியாக டெலிவரி செய்யப்படுவதற்கு முன்னர் ஹெகென்டோர்ஃப்பில் உள்ள பார்சல் டெலிவரி சேவையின் தளவாட மையத்தில் சோதனை செய்யப்பட்டது.
சோதனையின் போது இரண்டு சாதனங்களும் சுங்கத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. ஆர்டர் செய்த நபருக்கு தற்போது 200 பிராங்குகள் அபராதமும், மொத்தம் 500 பிராங்குகள் கட்டணமும் விதிக்கப்பட்டுள்ளது .
மேலும் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரேடார் எச்சரிக்கை கருவிகள் முற்றாக அழிக்கப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது.