சுவிஸில் படுக்கையறைக்குள் நுழைந்த பாம்பால் பதறிய தம்பதியினர்.!! சுவிட்சர்லாந்தின் சப்ஹவுசன் மாகாணத்தில் வசிக்கும் தம்பதியினருக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
செப்டம்பர் 2, 2024 அன்று இரவு, சுவிட்சர்லாந்தின் Schleitheim ஐச் சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்கள் வீட்டில் ஒரு வழக்கத்திற்கு மாறாக பாம்பு ஒன்று சுறுண்டு படுத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதன் விளைவாக Schaffhausen போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.v
சரியாக இரவு 10:22 மணி அளவில், 75 வயது முதியவர் ஷாஃப்ஹவுசன் காவல்துறையின் அவசரநிலை மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு, அவர்கள் வாழும் இடத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்ததாகத் தெரிவித்தார்.
ஒளிந்துகொள்ள முயன்ற பாம்பு, அறையின் ஒரு மூலையில், ஒரு அலமாரிக்கு அருகிலும், குப்பைத் தொட்டிக்குப் பின்னும் ஒளிந்துகொண்டது. இதனால் பதட்டமடைந்த அந்த வயதான தம்பதியினர் உதவி வரும் வரை பாம்பு மறைந்திருக்கும் இடத்தை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.
(c) Schaffhauser Polizei
பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றபோது, குறித்த பாம்பு ஒரு தீங்கற்ற, விஷம் இல்லாத பாம்பு எனவும், இது பெரும்பாலும் புல்வெளிகளில் காணக்கூடியது எனவும் தெரிவித்தனர்.
ஜெர்மன் மொழியில் “ரிங்கல்நாட்டர்” என்று அழைக்கப்படும் ஒருவகை பாம்பு இனமே அது எனவும் அவர்கள் அடையாளம் கண்டிருந்தனர். தோராயமாக 90 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த பாம்பு தம்பதியினருக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை.
அதிகாரிகள் பாம்பை பத்திரமாகப் பிடித்து பெரிய காகிதப் பையில் வைத்தனர். பாம்பு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்த பிறகு, அவர்கள் அதை தங்கள் ரோந்து காரில் சிறிது நேரம் சவாரி செய்தனர்.
பின்னர் பாம்பு மீண்டும் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.