சுவிட்சர்லாந்தில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசித்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் இவ்வாறான கைதுகள் நான்கு மடங்காக உயர்வடைந்துள்ளது. சட்ட ரீதியான அனுமதியின்றி சுவிட்சர்லாந்தில் 7891 பேர் தங்கியிருப்பதாக சுவிஸ் எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
சுவிஸில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை உயர்வு
ஒரு மாதத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் வரையில் இவ்வாறு சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் கிழக்கு மற்றும் தென் எல்லைப் பகுதிகள் வழியாக பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் சட்டவிரோத ஆட்கடத்தல்கள் என சந்தேகிக்கப்படும் 355 சம்பவங்கள் குறித்து பதிவாகியுள்ளதாகவும் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.