சுவிஸில் குடிபோதையில் ஏற்பட்ட வாகன விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் அல்ஹகோல் தொடர்பான வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜெனீவா கான்டனில் அதிகளவான விபத்துச் சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் மதுபயன்பாட்டினால் ஏற்பட்ட வாகன விபத்துக்களின் எண்ணிக்கை 3815 ஆக பதிவாகியுள்ளது.
சுவிஸில் குடிபோதையினால் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த விபத்துக்களில் 364 விபத்துகள் உயிராபத்து ஏற்படுத்தியவை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெனீவாவில் பத்தாயிரம் பேருக்கு 0.95 விபத்துக்கள் என்ற அடிப்படையில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
automobile association Touring Club Switzerland (TCS) என்ற அமைப்பினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.