சுவிஸில் இலத்திரனியல் வாகனம் (Electro Auto) ஓடுபவரா நீங்கள்..? ஆப்பு ரெடி..!! சுவிட்சர்லாந்தில் இலத்திரனியல் வாகன பயன்பாடு கட்டுப்படுத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சாரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் இலத்திரனியல் வாகனப் பயன்பாடு வரையறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் வாகனங்கள் குறிப்பிடத்தக்களவு மின்சாரத்தை பயன்படுத்துவதாகவும் சராசரியாக சுவிட்சர்லாந்தில் ஓர் கார் 13500 கிலோ மீற்றர் தூரம் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிஸில் இலத்திரனியல் வாகனம் (Electro Auto) ஓடுபவரா நீங்கள்..? ஆப்பு ரெடி..!!
ஒரு கிலோ மீற்றர் பயணிப்பதற்காக இலத்திரனியல் கார் ஒன்று 200 வெட் மின்சாரம் தேவைப்படுகின்றது. இரண்டு இலத்திரனியல் கார் கொண்ட ஓர் வீட்டில் ஆண்டு தோறும 5400 கிலோ வெட் மின்சாரம் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரணமாக வீடு ஒன்றின் சராசரி மின்சாரத் தேவையான 4500 கிலோ வெட் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மின்சாரத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டால் மின்சாரக் கார் பயன்பாட்டுக்கு வரையறைகளை பிறப்பிக்க நேரிடலாம் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
எனினும் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு ஒரு தரப்பினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்