சுவிற்சலாந்து LUZERN நகரில்…. தமிழ் புத்தக கண்காட்சியும் விற்பனையும்…
வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்கும் என்பது அறிஞர்களின் கருத்தாகும். அதுமட்டுமின்றி வாசிப்பு என்பது ஒரு சிறந்த பழக்கவழக்கமும் ஆகும். வாசிப்பு என்பது அன்றாட வாழ்க்கையில் இயல்பான ஒரு செயல்பாடாக இருக்க வேண்டும். அன்றாடம் குளிப்பது, சாப்பிடுவது மாதிரி. ஆனால், நம் சமூகம் இப்படி நினைப்பதில்லை.
பள்ளிப் படிப்பு, வேலைக்கான உத்தரவாதம் என்று நம்புகிறார்கள்; ஆனால், வாசிப்பது வாழ்க்கைக்கான ஊட்டம் என்று யாரும் கருதுவதில்லை.
“நான் வாசிக்காத புத்தகங்களை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்கிறார் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.
அந்த வகையில் உலகின் ஆகச் சிறந்த தலைவர்கள் ஏன் புத்தக வாசிப்பை இவ்வளவு தூரம் நேசித்தார்கள்? ஏனென்றால் புத்தகங்கள் ஒரு மனிதனை மனிதனாக்குகிறது. அமைதி எனும் உயரிய ஞானத்தை வழங்கி தன்னை வாசிப்பவர்களை தலை நிமிர செய்கிறது.
சுவிற்சலாந்து LUZERN நகரில்…. தமிழ் புத்தக கண்காட்சியும் விற்பனையும்…
இப்போதெல்லாம் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களில் எத்தனை பேர் வாசிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம்..? எத்தனை பேர் எங்கள் சார்ந்தவர்களை வாசிப்பதற்கு ஊக்கப்படுத்துபவர்களாக இருக்கிறோம்..?
கால ஓட்டத்தில் நேரம் இன்றி ஓடிக்கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் உறவுகளே தொலைபேசியை கொஞ்சநேரம் தொலைவில் வைத்துவிட்டு வாரம் ஒரு தடவையேனும் பிடித்த புத்தகங்களை வாசிக்க பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். நேரம் இல்லை என்று நேரத்தின் மீது பழியை தூக்கிப்போடாமல் எமக்கான நேரத்தை நாமே உருவாக்கி கொள்ளுவோம்.
சுவிற்சலாந்து LUZERN நகரில்…. தமிழ் புத்தக கண்காட்சியும் விற்பனையும்…
சுவிற்சர்லந்தில் வசிக்கும் எம் தமிழ் உறவுகளுக்கான ஐனவரி 7ம் 8ம் திகதிகளில் உங்கள் வாசிப்பை அதிகரிக்கும் நோக்கில் அரிய பல புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இந்த நிகழ்வில் நீங்கள் உங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கி சென்று வாசித்து சிறப்படையவேண்டும் எனவும் எமது ஊடகம் தயவாக வேண்டிநிற்கிறது.
LUZERN மாநகரில் இடம்பெறும் இந்த நிகழ்வில் சுவிற்சர்லாந்து தமிழர்கள் அனைவும் முடியுமானவரை கலந்துகொள்ளுங்கள்….. இந்நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வுக்கு SwissTamil24.Comஇணையமும் SwissTamilRadio இணையவானொலியும் தமது ஊடக அணுசரணையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவிற்சலாந்து LUZERN நகரில்…. தமிழ் புத்தக கண்காட்சியும் விற்பனையும்…
தமிழ் புத்தக கண்காட்சியும் விற்பனையும்…
7,8 ஜனவரி 23 சனி, ஞாயிறு ( இரு தினங்கள்)
காலை 11 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை
Gerliswilstrasse 16 6020 Emmenbrucke Luzern
உங்களுக்கு எந்த நூல்கள் வேண்டுமோ இப்போதே தெரிவித்தால், இந்த நிகழ்வில் பெறலாம்! புத்தக விபரங்களுக்கு (0044) 7817262980 Mob , whatsup
இலங்கை, இந்தியா, புகலிட எழுத்தாளர்களின் நூல்களுடன், குழந்தைகளுக்கான தமிழ் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்களும்…….