சுவிற்சர்லாந்து முழுவதும் அதிகரிக்கப்போகும் வீட்டு வாடகை கட்டணம்.!! சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டில் வாடகைத் தொகை உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்து முழுவதும் அதிகரிக்கப்போகும் வீட்டு வாடகை கட்டணம்.!!
சூரிச் கான்டனல் வங்கியின் பிரதம ரியல் எஸ்டேட் நிபுணர் உர்சினா கப்லி தெரிவித்துள்ளார்.
பணவீக்கம், வெப்பமாக்குவதற்கான செலவுகள் உயர்வு போன்ற ஏதுக்களினால் நாட்டில் வாடகைத் தொகை உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஜெனீவா, சூரிச் போன்ற கான்டன்களில் பொதுவாகவே வாடகைத் தொகை அதிகளவில் காணப்படும்.
எனினும், இந்த ஆண்டில் நாடு முழுவதிலும் வாடகைத் தொகை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 4 முதல் 4.5 வீதம் வரையில் வாடகைத் தொகை உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.