சுவிற்சர்லாந்து சொலுத்தூர்ன் மக்களுக்கு போலீசார் அவசர எச்சரிக்கை ..!! சுவிற்சர்லாந்தின் பல்வேறு மாகாணங்களிலும் கடந்த சில வாரங்களாக போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி இடம்பெற்று வருகின்றiமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான பல செய்திகளை நாம் உடனுக்குடன் பிரசுரித்திருந்தோம். தற்போது சொலுத்தூர்ன் கன்டோனிலும் போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் வயதானவர்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பாக சொலுத்தூர்ன் மாநில போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் :-
கடந்த சில நாட்களாக, “அதிர்ச்சி தரக்கூடிய தொலைபேசி அழைப்புகள்” தொர்பாக சொலுத்தூர்ன் கன்டோனல் காவல்துறைக்கு அதிகமான குடிமக்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த மோசடி மூலம், மோசடி செய்பவர்கள் பொதுவாக வயதானவர்களை அழைத்து, ஒரு தீவிரமான போக்குவரத்து விபத்து போன்ற அவசரநிலையில் உறவினர் இருப்பது போல் பாசாங்கு செய்கிறார்கள். குற்றவாளிகள் மிகவும் தொழில் ரீதியாக கைதேந்தவர்களாக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மற்றும் குறித்த அழைப்புகளை மேற்கொள்ளும் குற்றவாளிகள் தங்களை போலீசார் எனவும் வழங்கறிஞர் எனவும் அறிமுகப்படுத்துவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. ஒரு பெரிய தொகையை (உதாரணமாக ஒரு அறுவை சிகிச்சைக்காக) செலுத்துவதன் மூலம் மட்டுமே அவசரநிலையை தவிர்க்க முடியும் என தொலைபேசி மூலம் அவர்களை மீண்டும் மீண்டும் அழுத்தத்திற்கு உட்படுத்தியும் உள்ளார்கள்.
இது மாத்திரம் இன்றி அக்கம் பக்கத்தில் கள்வர்கள் நடமாட்டம் இருப்பதால் பணத்தை தாம் சொல்லும் இடத்திற்கு தனியாக வந்து ஒப்படைக்கும் படியும் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சொலுத்தூர்ன் மக்களுக்கு போலீசார் அவசர எச்சரிக்கை
இது போன்ற சம்பவங்கள் சுவிற்சர்லாந்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் சொலுத்தூர்ன் கன்டோனல் போலீசார் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
இவ்வாறான ‘போலி தொலைபேசி’ அழைப்புகளிடம் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது:
உங்களிடம் அநாகரீமான முறையில் பேசினாலோ உங்களை அழுத்தத்திற்கு உள்ளாகினாலோ உடனடியாக தொலைபேசியை துண்டிக்கவும்.
உங்கள் நிதி நிலைமைகள், மதிப்புமிக்க பொருட்கள் அல்லது கடவுச்சொற்கள் பற்றிய தகவல்களை வழங்க வேண்டாம்.
உங்களுக்குத் தெரியாத நபர்களுக்கு ஒருபோதும் பணத்தையோ மதிப்புமிக்க பொருட்களையோ கொடுக்க வேண்டாம்.
சந்தேகத்திற்கிடமான அழைப்புகளை உடனடியாக உங்கள் பகுதியில் உள்ள பொருத்தமான காவல்துறைக்கு அல்லது அவசர எண் 117 மூலம் புகாரளிக்கவும்.
மோசடி செய்பவர்கள் உங்கள் பணத்தை பல வழிகளில் பெற முயற்சி செய்கிறார்கள், எனவே பாதுகாப்பாக இருக்கவும். சுவிற்சர்லாந்தில் வசிக்கும் நீங்கள் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடனும் பகிரவும். நன்றி.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.