சுவிற்சர்லாந்தில் இருந்து ஈழத்தமிழ் கலைஞர்களால் நேற்று காதலர் தினத்தன்று பாடல் ஒன்று உலகம் முழுவதுமாக வெளியிடப்பட்டிருந்தது. ‘மாயவள்’ Maayaval என்ற பெயர் கொண்ட அந்தப்பாடல் சுவிற்சர்லாந்து தமிழர்கள் மாத்திரம் இன்றி உலகத்தமிழர்கள் பலரின் பாராட்டுக்களை பெற்று வருவதோடு இணையத்தில் வைரலாகவும் பார்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Kaji மற்றும் Sujiஎன்ற இரு இளம் கலைஞர்களின் சொந்தப்படைப்பாக வெளியாகி இருக்கும் இந்தப்பாடல் இவர்களின் ஒரு ‘கன்னி முயற்சி’ என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். முதல் படைப்பே அனைவரும் பராட்டும் படி அமைந்திருக்கின்றமை எமது கலைஞர்களின் படைப்புகளுக்கான அங்கீகாரத்தை உலகத்தமிழர்கள் மத்தியில் பறைசாற்றி இருக்கிறது.-
Maayaval Official Music Video
பெண்ணின் அழகை மையப்படுத்தி சுவிற்சர்லாந்தின் இயற்கை கொஞ்சும் அழகிய பனிமலைகளுக்கிடையில் காட்சிப்படுத்திருக்கும் அந்தப்பாடல் காதுகளுக்கு மட்டும் இன்றி பார்ப்பவர்களின் கண்களுக்கும் விருந்தளிக்கின்றது.
பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் காதல் நின்று விளையாடி இருக்கிறது என்றே சொல்லலாம். பாடலின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது Suji அவர்களின் அழகும்.. நடிப்பும்…
பாடலின் இசை காதுகளில் தேன் இசை பாய்ச்சுகிறது.. இது ஒரு கன்னி முயற்சியா என வியந்து பார்க்கும் அளவுக்கு முதல் படைப்பே பார்ப்பவர்களை மூச்சு முட்ட வைக்கிறது என்றே சொல்லலாம்.
Maayaval Official Music Video
வெறுமனே டிக்டாக் செய்து கொண்டிருந்த இரு இளம் யோடிகள் இணைந்து இந்தப்படைப்பை உலகத்தமிழர்கள் மத்தியில் கொடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இன்று இருக்கின்ற சமூகவலைத்தளங்களை இவ்வாறான தங்களது திமைக்கான களமாக பல கலைஞர்கள் பயன்படுத்துவது ஒரு ஆரோக்கியமாக விடயமாகும்.
பெரிய அளவிலான அனுபங்கள் இல்லாமல் வெறுமனே கன்னி முயற்சியாக தமது திறமையை உலகத்தமிழர்களை நம்பி தங்களது படைப்புகளை முன்வைத்த Kajiமற்றும் Suji ஆகியோர் தம்பதிகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகவும். புலம்பெயர் நாட்டில் வேலைப்பழுக்களுக்கும் மத்தியில் தங்களது படைப்பை சிறப்பாக செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கும் அவர்கள் இருவருக்கும் எமது இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறது.
மொத்தத்தில் ‘மாயவள்’ பாடல் …தமிழர் மனங்களில் மாயம் செய்கிறாள்…
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.