சுவிற்சர்லாந்தில் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை.
சுவிட்சர்லாந்து எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய விடயங்கள் தொடர்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்கள் அல்லது சிறு குழுக்களினால் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி மற்றும் வலதுசாரி கடும்போக்குவாதிகளினால் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பு கட்டமைப்பு பலவீனமாகவே காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்குலக நாடுகளுக்கும் சீனா மற்றும் ரஸ்யா என்பனவற்றுக்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமைகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.