சுவிற்சர்லாந்து ஒரு ஐனநாயக நாடு என்பது நீங்கள் அறிந்த விடயம். ஆனால் இங்கும் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. 2022 ம் ஆண்டு நிறைவு பெற்று 2023 ஆண்டு பிறக்க இருக்கிறது.
இந்த நேரத்தில் கடந்த ஆண்டுகளில் சுவிற்சர்லாந்தில் அதிகளவான போராட்டங்கள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் வரலாறு காணாத அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு போராட்டம் என்ற அடிப்படையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் வரையில் 363 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டில் 360 போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் உக்ரைன் மக்களுக்காக குரல் கொடுத்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களே அதிகளவில் சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் 26ம் திகதி ரஸ்யாவின் படையெடுப்புக்கு எதிராக 20000 பேர் பேர்னில் போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.